ஜெர்மன் நகரில் 500 கிலோ எடை கொண்ட குண்டு... 2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட வெடிக்கப்படாத குண்டு
ஜெர்மனியின் எஸ்ஸென் நகரில், ஒரு வீட்டின் பாதாள அறையை மறுகட்டுமானம் செய்ய தோண்டுகையில், 500 கிலோ கிராம் எடை கொண்ட பழைய குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
75 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இந்த குண்டு, வெடிக்கப்படாமல், பூமியில் புதையுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை செயலிழக்க செய்யும் வரை, அந்த பகுதியை சுற்றி வசிக்கும் சுமார் 3 ஆயிரம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.