Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-11-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-11-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-11-02 01:04 GMT

சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை..ராயப்பேட்டை ஜி.பி. ரோடு பகுதியில் 2வது நாளாக தண்ணீர் தேங்கியது..... தி.நகரில் சுரங்கப் பாதை மூடப்பட்டது...

சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று காலை முதல் இன்று காலை 4 மணி வரை 11 சென்டி மீட்டர் மழை பதிவு...மீனம்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல்... 

தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் தொடர் மழை...சங்கரன்கோவில், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துர் பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்தது..

அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...சென்னையிலும் பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு...

அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, மழை நீர் தேங்காதவாறு கவனமாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை...சிறு தவறுகள் கூட, அரசுக்கு பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை...

சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக அவசர கால செயல்பாட்டு மையம் அமைப்பு...இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்...

கடந்த மழைக்காலத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை படகு ஓட்டிய இடத்தில், இம்முறை ஒரு சொட்டு தண்ணீர் இல்லை...95 சதவீத மழைநீர் வடிகால் பணி முடிந்துள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு, தகவல்...

தற்போது 13 செ.மீ. மழை பெய்துள்ள நிலையில், 25 செ.மீ. மழை பெய்தால் சென்னை தாங்குமா?தயார் நிலை குறித்து மாநகராட்சி மேயர் பிரியா, தந்தி டிவிக்கு பிரத்யேக தகவல்...

டி 20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேச அணியுடன் இந்திய அணி மோதுகிறது...அடிலெய்டு மைதானத்தில் மழைக்கு 60 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி...

Tags:    

மேலும் செய்திகள்