Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29 -12-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29 -12-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-12-29 00:53 GMT

கடந்த நான்கு நாட்களில் தமிழகத்துக்கு விமானத்தில் வந்த 6 பேருக்கு கொரோனா...புதிய வகை வைரஸ் பாதிப்பா என 3 நாட்களில் தெரியும்...

இந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்குள் BF.7 திரிபு கொரோனா பரவல் வேகமெடுக்கும்...ஒருவர் பாதிக்கப்பட்டால், 16 பேருக்கு பரவக்கூடும் என மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை...

கொரோனா தாக்கத்தை பொறுத்தே பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடு மற்றும் வழிமுறைகள் வகுக்கப்படும்...வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்பு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்...

பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு...ஜனவரி 9ஆம் தேதியன்று பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்...

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படும்...அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு....

இலவச வேட்டி, சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களை வஞ்சிப்பதாக தமிழக அரசு மீது பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு...487 கோடி ரூபாயை வெளி மாநில தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டுள்ளதாகவும் விமர்சனம்...

இலங்கைக்கு ஆறு மாதங்களுக்கு முன் தமிழக அரசு அனுப்பிய அரிசி மூட்டையில் புழு மற்றும் வண்டுகள் இருந்ததால் அதிர்ச்சி...வவுனியா பகுதியில் உள்ள கிராமத்தில் பதுக்கி வைத்திருப்பதை பொதுமக்கள் கண்டு பிடித்தனர் ...

பொங்கல் திருநாளுக்கான சிறப்பு ரயில்களுக்கு இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்...தெற்கு ரயில்வே அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்