Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-10-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-10-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-10-14 00:56 GMT

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடக்கிறது...17ஆம் தேதி துவங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை

நீட் தேர்வை கட்டாயமாக்கியதற்கு எதிராக தமிழக அரசு 2020-ஆம் ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனு..உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு எப்போது விலக்கு பெற்றுத் தருவீர்கள்...முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

மதுரை மாவட்ட திமுகவில் பகிரங்கமாக வெடித்த உள்கட்சி பூசலால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேதனை...என்ன நடக்குமோ, அது விரைவில் நடக்கும் எனவும் எச்சரிக்கை...

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், எம்.எல்.ஏ படத்தை பேனரில் வைக்காததால் திமுக கவுன்சிலருக்கு கத்திக் குத்து...திமுக எம்எல்ஏவின் மகன் உட்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு...

பெரியார் முதலில் கடவுளை வேண்டி கொண்டிருந்தவர்தான்...வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பரபரப்பு பேச்சு...

Tags:    

மேலும் செய்திகள்