Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-09-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-09-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-09-13 00:49 GMT

குடிசைகளை தார்ப்பாய் கொண்டு மறைக்கும் ஆட்சி அல்ல, திராவிட மாடல் ஆட்சி - கொளத்தூர் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை - வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு

புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு - செப்டம்பர் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து வரும் 16ம் தேதி ஆர்ப்பாட்டம் - அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மின் வாரியத்தில் உள்ள 8 ஆயிரம் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் - தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் நடந்த தன்னுடைய மகனின் திருமண செலவு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன - வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி விளக்கம்

Tags:    

மேலும் செய்திகள்