60 கிலோ ஹான்ஸ் கடத்தல்.. சிக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி மாஜி நிர்வாகி - சேலத்தில் பாரபரப்பு ...

Update: 2023-06-05 06:28 GMT

ஓமலூர் அருகே 60 கிலோ ஹான்ஸ் கடத்தலில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் முன்னாள் நிர்வாகி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரில் இருந்து ஓமலூர் வழியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சோதனை மேற்கொண்ட தனிப்படை போலீசார், பெங்களூரில் இருந்து வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது 4 மூட்டைகளில் 60 கிலோ ஹான்ஸ் இருந்த‌து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் முன்னாள் இளைஞரணி செயலாளர் மஞ்சுநாத், கிருஷ்ணகிரியை சேர்ந்த கோதண்டராமய்யா மற்றும் விஷால்ராஜ் ஆகியோரை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்