காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-20 00:57 GMT

அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சால், நாடாளுமன்ற வளாகத்தில் களேபரம்....

இந்தியா கூட்டணி, பாஜக எம்.பி.க்கள் நடத்திய போராட்டத்தால் தள்ளுமுள்ளு....

2 எம்.பி.,க்களின் மண்டை உடைப்பு.. ராகுல்காந்தி மீது சரமாரி குற்றச்சாட்டு.........

--------------------------

நாடாளுமன்ற நுழைவு வாயில் போராட்டத்தின்போது தாக்கப்பட்டதாக இந்தியா கூட்டணி, பாஜக எம்.பி.க்கள் மாறிமாறி புகார்.....

மீண்டும் ஒரு திசை திருப்பும் முயற்சியை பாஜக அரங்கேற்றியுள்ளதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு...

-----------------------

பாஜக எம்.பி.க்களை தாக்கியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு.....

பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர், பன்சூரி சுவராஜ் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் பார்லிமென்ட் ஸ்ட்ரீட் போலீசார் நடவடிக்கை...

-----------------------

நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில் முன்பு போராட்டம் நடத்த தடை........

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு.... 

-----------------------

அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய அமித்ஷாவை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்.....

அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு....

-----------------------

ஈரோட்டில் 951 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை இன்று துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...........

133 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.........

-----------------------

ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை..........

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்.............

-----------------------

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பங்கர் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் பலி....

படுகாயமடைந்த தொழிலாளர்கள் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி....

விபத்து காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி...

-----------------------

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்திலிருந்து உயிர் பிழைத்த திக் திக் நிமிடங்கள்....

மீட்கப்பட்டவர்கள் அளித்த அதிர்ச்சி தகவல்.....


மேலும் செய்திகள்