23 நிமிடத்தில் 51 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (18.07.2023)

Update: 2023-07-18 03:44 GMT

ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு வாரம் டெல்லி சென்ற வந்த பிறகு, அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுள்ளதாக திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார். இது திமுகவிற்கு விடப்பட்ட நேரடி மிரட்டல் என் கூறிய அவர், அதிகாலை 3.30 மணி வரை விசாரணை நடத்தியது மனித உரிமை மீறல் எனக் குற்றம்சாட்டினார்.


அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைக்கெல்லாம் பயப்பட மாட்டோம், நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரை அடுத்த ஆதியூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவைப்போல் திமுகவையும் கைக்குள் வைக்க பாஜக முயற்சிப்பதாகவும் அது நடக்காது எனறவும் கூறினார். மத்தியில் பாஜக ஆட்சியை தூக்கி எறியத்தான், முதல்வர் ​ஸ்டாலின் பெங்களூரு சென்றிருப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.


காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் போலீஸார் அவரை அழைத்துச் சென்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி வரி கட்டுபவர் என்பதால், அவருக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக, சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.


புழல் சிறைக்கு கொண்டு வரப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பிறகு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்