"கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி 'அமாவாசை'-க்கு 50,000 நிவாரணமா..?" - கொந்தளித்த ஈபிஎஸ்

Update: 2023-05-17 03:21 GMT

கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அமைச்சர் நிவாரணம் வழங்கியது தெரியவந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் தா.மோ‌.அன்பரசன் வழங்கினார். அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் வழங்கினார். அப்போது, கள்ளச் சாராயத்தை விற்ற அமாவாசை என்பவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால், அவருடைய பெயரும் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக இருந்தது. இதையறிந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமாவாசையை தவிர்த்து விட்டு மற்றவர்களுக்கு மட்டும் காசோலையை வழங்கி விட்டு சென்றார். இதற்கிடையே, அம்மாவாசை பெயருடன் இருந்த பட்டில் சமூக வலைதளங்களில் பரவியதால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்