25 நிமிடத்தில் 46 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (21.06.2023)
செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என சென்னை முதன்மை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறை விசாரணை, சிகிச்சைக்கு தொந்தரவாக அமையும் என்றும், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் காவேரி மருத்துவக் குழு தெரிவித்துள்ள உள்ளதாகவும், அதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது தரப்பை கேட்ட பிறகே அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
அமலாக்கத் துறை நடவடிக்கையால், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல, திமுகவுக்கே நெஞ்சு வலி வந்து விட்டது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை விசாரணையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தன்னையும் அமலாக்கத் துறை விசாரித்தார்கள் என்று தெரிவித்த டிடிவி தினகரன், விசாரணை பாதிப்பில் இருந்து மீண்டுவர ஒன்றரை ஆண்டுகள் ஆனதாக கூறினார்..
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதின்போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், சட்ட நடைமுறைகளின் படி அவருக்கு உரிய நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி, அவரது மனைவி மேகலா, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதோடு, கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று, அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.