சிறையில் 44 ஆண் கைதிகள், 1 பெண் கைதிக்கு எய்ட்ஸ்.. அதிர்ச்சியில் உத்தரகாண்ட் அரசு

Update: 2023-04-10 06:08 GMT

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறையில் 44 ஆண் கைதிகளும், 1 பெண் கைதியும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விஷயம் பரிசோதனையின் போது வெளிச்சத்திற்கு வந்தது. லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு மருந்து வழங்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது சிறையில் ஆயிரத்து 629 ஆண் கைதிகள் மற்றும் 70 பெண் கைதிகள் உள்ளனர். அதிக எண்ணிக்கையிலான கைதிகளுக்கு எச்ஐவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, எச்ஐவி பாதித்த கைதிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில், சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்