35 ஆண்டுகளுக்கு முன் துண்டான நாடுகளை இணைத்த நிலநடுக்கம்.. துருக்கி எல்லையில் அதிசயம்
கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு துருக்கி மற்றும் ஆர்மேனியா இடையிலான எல்லைப் பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. முதலாம் உலகப் போரின் போது ஒட்டோமான் பேரரசில் ஆர்மேனியர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதால் ஆர்மேனியா - துருக்கி உறவு சீர் குலைந்தது. இந்நிலையில், 1980களின் பிற்பகுதியில் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை மூடப்பட்ட நிலையில், பல்லாயிரம் பேரை பலி கொண்ட நிலநடுக்க பாதிப்புகளுக்கு உதவ கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.