14 நிமிடத்தில் 33 செய்திகள்... மாலை தந்தி செய்திகள் | Thanthi Evening News | Speed News (08.05.2023)

Update: 2023-05-08 13:20 GMT

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் வெளியிட்டார். தேர்வு எழுதியவர்களில், 94.3 சதவீதம் பேர், அதாவது 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணாக்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 753 மாணவிகளும், 3 லட்சத்து 49 ஆயிரத்து 697 மாணவர்களும் தேர்ச்சியடைந்தனர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வில், மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் 97.85 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. திருப்பூர் மாவட்டம் 97.79 சதவீதத்துடன் 2ம் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 97.59 விழுக்காடுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. கோவை மாவட்டம் 97.57 விழுக்காடுடன் 4ம் இடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் 97.36 சதவீதத்துடன் 5ம் இடத்தையும் பிடித்துள்ளன.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஆயிரத்து 10 கோடியே 19 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளுக்கு அமைச்சர்கள் நேரு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் அடிக்கல் நாட்டினர். மேலும் முடிவுற்ற பணிகளை பொது பயன்பாட்டிற்குத் துவக்கி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இளைஞரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. எம்ஜிஆர் நகரில் செல்வகுமார் என்பவர் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதில் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியதாக கூறப்படுகிறது. விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, எஸ்ஐ கோவிந்தராஜ் விரட்டியதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்