14 நிமிடத்தில் 30 செய்திகள்... இரவு தந்தி செய்திகள் | Thanthi Night News | Speed News (09.05.2023)

Update: 2023-05-09 14:42 GMT

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனம் ஆயிரத்து 891 கோடியில் ஏசி உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் சோதனை முயற்சியில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் முக அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பத்தை தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிறது. சோதனை அடிப்படையில் ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் இந்த முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாக்காளர்களின் வாக்களிக்கும் நேரத்தை குறைப்பதுடன், கள்ள ஓட்டுக்கள் பதிவாவதையும் தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா மிக விரைவில் நேரில் சந்திக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் விமர்சனத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

சென்னை அடுத்த குன்றத்தூரில் சாலை விரிவாக்க பணிக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கரைமாநகர் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கட்டிடங்களை இடிக்க ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பட்டிருந்த நிலையில், ஜேசிபி இயந்திரங்களுடன் அதிகாரிகள் வந்த போது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை சிறைப்பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்