சுங்கச்சாவடி அருகே முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள் - பொதுமக்கள் பீதி | krishnagiri | thanthi tv
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 1 மாதமாக மூன்று காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது 3 காட்டு யானைகளும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே முகாமிட்டுள்ளன. இதையடுத்து, யானைகளை தேசிய நெடுஞ்சாலையை நோக்கி வர விடாமல் தடுப்பதற்கான பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.