மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரிக்க டிராக்டர்கள், டாடா ஏஸ் ஆகிய வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவை சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் பெயரில் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால், 2009ஆம் ஆண்டே காலாவதி ஆகிவிட்டன. ஆனால், தற்போது வரை அந்த வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், 2 டிராக்டர்கள் ஒரே பதிவெண்ணில் இயக்கப்படுகின்றன. இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடப்பதாக அதிமுக கவுன்சிலர்கள், போக்குவரத்து ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அந்த வாகனங்கள் இயக்கபடாமல், வாடகை வாகனங்களில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. பேரூராட்சி வாகனங்களை நேரில் சென்று போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.