கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, 16 வயது சிறுமி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சவாரிமேடு கிராமத்தை சேர்ந்த தங்கராசு - கலைவாணி தம்பதியரின் இளைய மகள், தேவிகா, வீட்டின் அருகே குடியிருக்கும் திமுக வார்டு கவுன்சிலர் குணசேகர் மகன் கஜேந்திரன், தேவிகாவை கடந்த ஒராண்டாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இது கஜேந்திரன் வீட்டிற்கு தெரியவர தேவிகா குடும்பத்தாரை, கஜேந்திரனின் உறவினர்கள் எச்சரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி அன்று இரவு வீட்டில் இருந்த தேவிகாவிற்கு கஜேந்திரன் செல்போனில் இருந்து அழைப்பு விடுத்தாக கூறப்படுகிறது. அவரை சந்திக்க சென்ற தேவிகா, வீட்டிற்கு வராததால், உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், 26-ம் தேதி கிணற்றில் இருந்து தேவிகா சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில்,4 நாட்களுக்கு பிறகு நங்கவரம் பேரூராட்சி திமுக வார்டு கவுன்சிலர் குணசேகர், அவரது மகன் கஜேந்திரன், உறவினர் முத்தையன் ஆகிய 3 பேரை கைது செய்து, போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.