"15 நாட்கள் இதற்கு தடை..."; "மீறினால் கடும் நடவடிக்கை" - எச்சரிக்கை விடுத்த டி.எஸ்.பி

Update: 2022-08-25 03:20 GMT

ஸ்ரீபெரும்புதுார் காவல் உட்கோட்டத்தில், செப்டம்பர் 7ம் தேதி வரை, 15 நாட்களுக்கு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில் புதிய விமானம் நிலையம் அமைக்க ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் உள்ள ஐந்து ஊராட்சி பகுதிகளில் நிலம் கையப்படுத்த உள்ளன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் காவல் உட்கோட்டத்தில், செப்டம்பர் 7ம் தேதி நள்ளிரவு வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த டி.எஸ்.பி., சுனில் தடை விதித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீபெரும்புதுார் உட்கோட்டத்தில் பல்வேறு காரணங்களால் அசாதாரன சூழல் நிலவி வருவதாக கூறியுள்ளார். அரசியல் கட்சியினர் கொடியேற்றுதல், பொதுகூட்டம் உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்வையும் முன் அனுமதி பெறாமல் நடத்த கூடாது என தெரிவித்துள்ளார். இதை மீறுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்