"பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்க் குறைவாக போட்டால்.." - ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை
- பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண்களை குறைத்து வழங்கினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள், தமிழகம் முழுவதும் 79 மையங்களில் மதிப்பீடு செய்யப்பட உள்ளன.
- இதில், 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.
- இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
- அதில், மாணவர்களுக்கு மதிப்பெண்களை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வழங்கிவிடக் கூடாது என்றும், குறைத்து மதிப்பெண் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மேலும், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரும் ஆசிரியர்கள், செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும், மையத்திற்கு வந்த பிறகு வெளியே செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.