இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30-03-2023)

Update: 2023-03-30 17:52 GMT

தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி தொடர்கிறது....நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடு தான் பயணம் செய்வோம் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.....

வேலூர் கோட்டையில், ஹிஜாப் அணிந்த பெண்களை தடுத்து நிறுத்திய விவகாரம்...கைதான ஆறு பேருக்கு ஏப்ரல் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.....

சென்னை கலாஷேத்ரா வளாகத்தில் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு....

கஞ்சா விற்பனை எங்கு நடைபெறுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவாரா?

ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் பள்ளி மாணவர்களுக்கு உணவளித்தது தவறா என எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கேள்வி.....

அதிமுக ஆட்சியில் அட்சய பாத்திரம் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 5 கோடி ரூபாய் கண்ணுக்கு தெரியாத கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது....ஆளுநர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அடிப்படையில் பணத்தை கொடுத்துள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆவேசம்...

அம்மா உணவகங்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்படவில்லை என ஆதாரத்துடன் நிரூபித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்...அம்மா உணவகங்கள் குறித்து வெளிவரும் தகவல்கள் தவறானவை என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதில்...

குஜராத் மாநிலம் வதோதராவில் ராமநவமி யாத்திரையின்போது கல்வீச்சு... வாகனங்கள் சூறை....பதற்றத்தை தவிர்க்க போலீசார் குவிப்பு... 

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் ராமநவமி கொண்டாட்டத்தின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்...வாகனங்கள் தீக்கிரை... வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்...

மத்திய பிரதேசத்தில் கோயிலில் கிணற்றில் தடுப்பு சுவர் இடிந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்த சோகம்....கிணற்றிலிருந்து 2 குழந்தைகள் உள்பட 19 பேர் பத்திரமாக மீட்பு...

டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு...கட்டட பணியாளர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சி....

ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள், அமெரிக்க சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு...அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ட்வீட்டால் பரபரப்பு...

 

Tags:    

மேலும் செய்திகள்