இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28-03-2023)

Update: 2023-03-28 17:54 GMT

ராகுல்காந்தி தகுதி நீக்கம், அதானி விவகாரம் காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைப்பு.

அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது...

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலையின் பெயரை மாற்ற மாநகராட்சி திட்டம்...அவ்வை சண்முகம் சாலையில், குறிப்பிட்ட பகுதிக்கு வி.பி.ராமன் சாலை என பெயர் மாற்ற முடிவு...

ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது....

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக் கோரி, ஒபிஎஸ், மனோஜ் பாண்டியன் தரப்பு மனு....சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை....

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு....

அதிமுகவின் தலைவராக விதிகள் எல்லாம் கிடையாது... தொண்டர்களின் ஆதரவோடு ஒருவர் உதயமாவார்...18 ஆண்டுகளுக்கு முன்பு கேட்கப்பட்ட கேள்விக்கு ஜெயலலிதா திடமான பதில்...

எம்ஜிஆர் அணிந்த தொப்பி, கூலிங்கிளாஸை ஈபிஎஸ்-க்கு அணிவித்த தொண்டர்கள்...

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு...தேர்தல் அதிகாரிகளான நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வெற்றி சான்றிதழை வழங்கினர்....

அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை கைவிடாமல், மாற்றியமைத்து செயல்படுத்தி வருகிறோம்...எம்ஜிஆர் கெட்டப்பில் காட்சி தந்த ஈபிஎஸ் மகிழ்ச்சி...

இந்தியாவில் தரமற்ற மற்றும் போலி மருந்துகளை தயாரித்ததாக 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து...

ஆதாருடன், பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்