இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13-03-2023)

Update: 2023-03-13 18:04 GMT

இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி செலுத்தக்கூறி தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸ்...தடை விதிக்க கோரி இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு...

இன்புளுயன்சா பாதிப்பால் திருச்சியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தது உறுதி...தமிழகத்தில் 545 பேருக்கு இன்புளுயன்சா பாதிப்பு இருப்பதாக தகவல்...

சுருக்குமடிவலை விவகாரத்தில் 53 மணி நேரம் வரை மீன்பிடிக்க அனுமதி கோரிய மீனவர்கள் தாக்கல் செய்த இடையீட்டு மனு...மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு...

பிளஸ் 2 தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்...பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சித் தகவல்...

தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடங்குகிறது...7 லட்சத்து 88 ஆயிரத்து 64 பேர் தேர்வு எழுதுகின்றனர் ...

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 22ம் தேதி நடப்பதாக கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு...முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா தொடர்பாக ஆலோசனை எனத் தகவல்...

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதியாகிவிட்டதா? இல்லையா?....முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி...

எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டால், அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவார்கள்....முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை.....

ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்....

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து ஆலோசனை....பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதம் என தகவல்....

மத்திய பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்...அதானிக்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை மீது மத்திய அரசு விசாரணை நடத்தக் கோரிக்கை...

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், வருகிற 21ம்தேதி, திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்... அரசு தலைமை கொறடா கோவி செழியன் அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்