விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 10-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சங்கரநத்தம் கிராமத்தில் கருப்பசாமி என்பவரின் ஒரே மகன் பாலமுருகன், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து, சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே மாணவர் பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கரநத்தம் கிராமத்தில் முறையான கழிவுநீர் கால்வாய்கள் இல்லாததால், சாலைகளில் கழிவுநீர் தேங்கி, கொசுக்கள் அதிகரித்து சிறுவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். கழிவுநீர் கால்வாய் வசதியை ஊராட்சி மன்றத் தலைவர் செய்து தர மறுப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், அந்த கிராமத்தில், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.