சுமார் 10 ஆயிரம் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
ட்விட்டர், மெட்டா நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அந்த வரிசையில் கூகுளும் இணைந்துள்ளது.
செயல்பாடு திறன் குறைவாக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செயல்திறன் மேலாண்மை திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், குறைவான செயல்திறன் கொண்ட 6 சதவீத ஊழியர்கள் அதாவது கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்...