பாரம்பரிய மீன்பிடி திருவிழா..போட்டிப்போட்டு மீன்களை அள்ளி சென்ற 10 கிராமத்து மக்கள்..
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த பெரிய கூவான கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஒற்றுமையை பறைசாற்றும் பாரம்பரிய மீன்பிடி திருவிழாவை, ஊர் முக்கியஸ்தர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து, கண்மாயை சுற்றி காத்திருந்த 10 கிராம மக்கள் மீன்களை பிடிக்க கண்மாய்க்குள் இறங்கினர். போட்டிப்போட்டு வலைகளை வீசிய மக்கள், விரால், சிலேபி, கெண்டை உள்ளிட்ட மீன்களை பிடித்து அசத்தினர்.