ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை முதலீடு மாதாமாதம் கமிஷன்... ஆன்லைனில் மார்டன் மோசடி..!

Update: 2022-09-27 11:20 GMT

ஆன் லைன் வர்த்தகத்தில் கோடி கணக்கில் மோசடி

செய்ததாக கூறி, தனியார் நிறுவனம் மீது நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முதலீட்டாளர்கள் திரண்டு வந்து புகார் அளித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆர்.பி.எக்ஸ் (RPX) என்ற ஆன்லைன் நிறுவனத்தில், ராசிபுரம்,திருச்செங்கோடு பரமத்திவேலூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், ஆன்லைன் மூலம் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை முதலீடு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் முதலீடு செய்த மக்கள் அந்த நிறுவனத்தில் பணம் அனுப்பிய யூ டி ஆர் (12 லக்க எண்) பதிவினை சான்றாக இணைத்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகார் மனுவில், அன்றாட தேவைகளுக்கான பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து வரும் நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்நிறுவனத்தில் இருந்து மாதா மாதம் தருவதாக கூறியிருந்த, கமிஷன் தொகை கிடைக்கவில்லை என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசார் இந்த மோசடியை கண்டுபிடித்து உரிய பணத்தை மீட்டுத் தருமாறு முதலீட்டாளர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்