"சட்ட போராட்டம் நடத்தி தான் அரசு வேலைக்கு போக வேண்டியதா இருக்கு..." - காவல்துறையில் பணியாற்ற போராடும் திருநங்கை

Update: 2023-04-16 02:56 GMT

காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பதே, லட்சியம் என, திருநங்கை யாழினி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா உம்பளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் திருநங்கை யாழினி. இவர் பி.இ. மெக்கானிக்கல் படித்துள்ளார். இவர்

2021 - ல் நடைபெற்ற காவல்துறைக்கான உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டார். அதில் அவரது உயரம் 158.5 சென்டிமீட்டர் உயரம் இருந்ததால் காவல்துறை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் யாழினி வழக்கு தொடர்ந்து, இடைக்கால உத்தரவு பெற்று மீண்டும் 2021 செப்டம்பர் மாதம் திருச்சியில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் இதுவரை அவருடைய மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக சட்டப் போராட்டம் சென்னை காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வுக்கு தயாராகி வருகிறார். திருநங்கைகள் ஆனாலும், சட்ட போராட்டம் நடத்தி தான் அனைத்தையும் பெற வேண்டி இருப்பதாக யாழினி வேதனை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்