புரட்டாசி வந்துட்டாலே நம்ம ஊர்ல பல வீடுகள்ல வெஜ்தான் செய்வாங்க... பட் அசைவப் பிரியர்களை வெச்சு செய்வாங்க...
செப்டம்பர் 22... அதாவது, வர்ற வெள்ளிக்கிழமை சைவ சாப்பாட்டுக்காரங்களை கட்டிப் புடிக்கிற தினமாம். அதுக்கு அடுத்த வாரமே உலக சைவ சாப்பாட்டு தினமும் வருது. இதெல்லாம் கரெக்டா நம்மூர் புரட்டாசி மாசத்துலயே வர்றது எப்படி? வாங்க ஆராய்ச்சி பண்ணலாம்... அடDay பகுதி மூலமா...
இனிமே ஒரு மாசத்துக்கு இந்த மாதிரி பாட்டை கேட்டு திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான். ஏன்னா, அசைவ பிரியர்களை அழ வைக்கவும் கோழி ஆடுகளை கொண்டாட வைக்கவும் வந்தாச்சு புரட்டாசி மாசம்.
புரட்டாசி வந்துட்டாலே நம்ம ஊர்ல பல வீடுகள்ல வெஜ்தான் செய்வாங்க... பட் அசைவப் பிரியர்களை வெச்சு செய்வாங்க...
இது நமக்கு மட்டும்தான்னு பார்த்தா, அமெரிக்காவுல வர்ற செப்டம்பர் 22 ஆம் தேதிய Hug a Vegetarian Day... அதாவது சைவ சாப்பாட்டுக்காரங்களை கட்டிப் பிடிக்கிற நாள்னு சொல்றாங்க.
இது கூட பரவாயில்ல... வர்ற அக்டோபர் ஒண்ணாம் தேதிதான் உலக சைவர்கள் தினமா கொண்டாடப்படுது... நம்மூர்ல புரட்டாசி மாசத்துலதான்... ஆனா இப்போ உலகமே சைவ சாப்பாட்டை கொண்டாடுறது ஒரு தற்செயலான ஆச்சரியம்தான்.... ஆக, இந்த நேரத்துலதானே நாமளும் வெஜ் வாழ்க்கையைப் பத்தி லைட்டா அலசி ஆராயிலாம் வாங்க...
உலக மக்களைப் பொறுத்தவரை விரதம்... அதாவது Fasting அம்ப்டிங்குற வார்த்தைக்கு சாப்பிடாமல் இருக்குறது தான் அர்த்தம்... அசைவ உணவை மட்டும் சாப்பிடாமல் இருக்குறது விரதம் கிடையாது. கிறித்தவம் இஸ்லாம் என உலக மதங்கள் எல்லாத்துலயும் Fasting ங்குற விரத முறை இருக்கு.
முதியவர்கள் மற்றும் குழந்தைகளால கடுமையான விரதம்லாம் இருக்க முசியாதுங்குறதுனால... பழங்கள், காய்கறிகள் மட்டும் சாப்பிடலாம்னு சில இடங்கள்ல விதி விளக்கு குடுத்துட்டாங்க... சோ இப்படித்தான் சைவ விரதம் உருவாகியிருக்கும்னு சொல்லிறாங்க அறிஞர்கள்...
உலகளவில் அசைவம் தவிர்ப்பதை விரதமாக மேற்கொள்ளும் நாடுகள் இந்தியாவும் எத்தியோப்பியாவும்தான். கிறித்தவர்கள் அதிகம் வாழும் எத்தியோப்பியாவுல ஒரு வருசத்துக்கு 180 நாட்கள் சைவ விரதத்த ஃபாலோவ் பண்ராங்க... அதாவது, சராசரியா ஆறு மாசம் அங்க புரட்டாசி மாதம்.
இன்று சைவ விரதத்தை உலக நாடுகள் வரவேற்குறாங்க... அதுக்கு காரணம்.... நம்ம மனுஷங்க அசைவ உணவ அதிகளவுல சாப்ட்டா மத்த உயிரினங்கள் அழிஞ்சே போகும்குற கருத்தே இதுக்கு காரணம். இதற்காக வாரத்துல ஒன்னு ரெண்டு நாட்கள்ல அசைவத்தை தவிர்க்குறாங்கனு ஒரு ஆய்வு சொல்லுது... இந்த உணவுமுறை பேரு reducetarian ஆம்...
சைவ உணவு முறையை நாம் பொத்தாம் பொதுவாக வெஜிட்டேரியன்னு சொல்லுறோம். ஆனால், வெஜிட்டேரியனிலேயே பல வகைகள் இருக்கு. சுத்தத்திலும் சுத்தமான சைவ உணவு முறை விகேன்னு (vegan) சொல்லுறாங்க. விகேன் உணவுக் காரங்க மாமிச உணவுகளை மட்டுமில்லாம... விலங்குகள் வழியாகப் கிடைக்குற பொருட்களைக் கூட தொட மாட்டார்கள்... அதாவது பால், தேன், பட்டுத்துணி இதைலாம் யூஸ் பண்ண மாட்டாங்கலாம்.... ஆனா லெதர் சூ மட்டும் போடுவாங்க...
சைவர்களில் சிலர் எல்லா விலங்குப் பொருட்களையும் அவாய்ட் பண்ணுவாங்க. ஆனா பால், தயிர், வெண்ணை மாதிரியான பால் பொருட்களை மட்டும் பயன்படுத்துவாங்க. இந்த கேட்டகிரிய lacto vegetarian னு சொல்லுவாங்க...
பாலைக் கூட குடிக்காத சில சைவர்கள் கோழி முட்டையை மட்டும் வெளுத்து வாங்குவாங்க... முட்டையை சைவமாகவே பாவிக்கும் இவங்க Ovo Vegetarian இல்லனா Eggitarian ங்குற பேர்ல உலாவிட்டு இருக்காங்க. பட் இவங்க ரொம்ப டேஞ்சர்ங்க... ஒரு உசுற உலகத்தையே பாக்க விடாம கொன்னு தின்னுபுட்டு... Eggitarian ஆ... Eggitarian... ஆல பாரு...
ஆடு, மாடு, மீன் போன்ற அசைவங்களை சாப்பிட மாட்டோம்... ஆனா, பறவைகளை சாப்பிடுவோம்ங்குற சைவர்களும் உலகத்துல உண்டு. இவங்கலாம் கோழி... அது போடுற முட்டை இது ரெண்டுத்தையும் ஒரு புடி பிடிச்சுடுவாங்க... இவிங்க பேர் என்ன தெரியுமா...எதோ Pollotarian ஆம்... என்னா பேரு பாருங்க...
எல்லா வித அசைவத்தையும் தவிர்ப்போம். ஆனால் மீன் மட்டும் சாப்பிடுவோம் என்று சொல்லும் சைவர்கள் Pescatarian என அழைக்கப்படுறாங்க...
அசைவம் எல்லாமே சாப்பிடுவோம்... ஆனால், முடிஞ்ச வரை கம்மியா சாப்பிடுவோம்னு சொல்லுறவங்க கூட ஒருவகை சைவர்கள் தான். இவங்கள... Flexitarianனு சொல்லுறாங்க...
உலக அளவுல சைவ நாட மதிக்கப்படுற நாடு எது தெரியுமா? நம்ம இந்தியாதான்... சும்ம சொல்லலங்க உலக சைவர்களில் 70 சதவீதம் பேர் இங்கதான் இருக்குறாங்க... இந்திய சைவர்கள் பெரும்பாலும் பால் பொருட்களை பயன்படுத்தும் Lacto Vegetarianகள தான் இருக்காங்க..
ஹிட்லர் ஒரு சைவ உணவுக்காரர். காட்டுமிராண்டிகளாக இருந்த மனித இனம் திருந்தி வருவதன் அடையாளமே சைவ உணவு என ஹிட்லர் நம்பினார். விரைவில் இந்த உலகமே சைவ உணவுக்கு மாறிவிடும் என அவர் எதிர்பார்த்தார்...
ஆனால், அசைவ உணவுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துத்தான் வருகிறது. இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் பாரம்பரியமாக சைவம் உட்கொள்ளும் மக்கள் கூட, பெரும்பான்மையோடு இணைவதற்காக அசைவ உணவுக்கு மாறி வருகிறார்கள். இப்படியே போனால், இந்த உலகில் உள்ள மொத்த விவசாய நிலங்களும் பண்ணை விலங்குகளுக்கு தீவனம் உற்பத்தி செய்யவே போதாது என்கிறார்கள் வல்லுநர்கள். இதைத் தடுக்க உலகத்துக்கே தேவை புரட்சி அல்ல... புரட்டாசி போன்ற மாதங்கள்தான்...
ஆனா இவளோ பேசுன நானே இன்னும் கொஞ்ச நேரத்துல மிகப் பெரிய அசைவ பிரியர் தான்... பட் இருந்தாலும் நம்ம நல்லதுக்காக கொரச்சுக்கலாம்னு நெனைக்குறேன்... சோ நீங்களும் அசைவத்த குறைச்சு ஆரோக்கியமா இருங்க...