2011ல் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றதாக நம்பப்படும் அமெரிக்க கடற்படை அதிகாரியான ராபர்ட் ஓ நீல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கைது செய்யப்பட்தாகத் தகவல் வெளியாகியுள்ளது...
தனது சுயசரிதையில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ராபர்ட் ஓ நீல் குறிப்பிட்டுள்ள நிலையில், அதை அமெரிக்க அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவோ அல்லது மறுக்கவோ இல்லை. இந்நிலையில், டெக்சாசில் தாக்கி காயப்படுத்துதல், மற்றும் பொது இடத்தில் போதைப் பொருட்களை உபயோகித்தல் குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் இந்திய மதிப்பில் 2 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலுத்தி பிணையில் விடுவிக்கபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... ஏற்கனவே 2016ல் இவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.