கமலா ஹாரிஸின் பதிலடி... சற்றும் எதிர்பாராமல் ஷாக்கான டிரம்ப்

Update: 2024-10-26 02:56 GMT

கமலா ஹாரிஸின் பதிலடி... சற்றும் எதிர்பாராமல் ஷாக்கான டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. ஹூஸ்டனில் தேர்தல் பிரசாரத்துக்கு முன்னதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலாஹாரிஸ், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பின், கருக்கலைப்பு உரிமை தொடர்பான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் சட்டவிரோத குடியிருப்புகளால் அமெரிக்கா குப்பை தொட்டியாக இருப்பதாக டிரம்ப் விமர்சித்ததையும் கண்டித்தார். அமெரிக்கர்களை உலகிற்கு சிறந்தவர்களாக முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும், டிரம்ப்பை போன்று, இழிவுபடுத்தக் கூடாது என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்