"இலங்கை வரலாற்றின் முக்கியமான படி" - அதிபர் ரணில் விக்ரமசிங்க கருத்து
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சந்தித்தனர். அப்போது பேசிய ரணில் விக்ரமசிங்க, ஐஎம்எஃப் உடன் ஏற்பட்டுள்ள இந்த
உடன்படிக்கை இலங்கை வரலாற்றின் முக்கியமான படி என்றார். திவால் நிலையிலிருந்து விடுபடுவது மற்றும் சிரமத்திலிருந்து விடுபடுவதும் முக்கியம் என குறிப்பிட்ட அவர், கடன்களை
செலுத்துவது, சமூக-பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க இந்த உடன்படிக்கை சற்று ஆறுதல் அளிப்பதாக தெரிவித்தார். மேலும், இது புதிய பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஆரம்பம்
என்றும் குறிப்பிட்டார். சமூக சேவைப் பணிகளை எளிதாகச் செய்யக்கூடிய வகையில், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு அனைவரும் ஒத்துப்போக வேண்டும் என்று ரணில் கேட்டுக்
கொண்டுள்ளார்.