திட்டமிட்ட ‘இந்தியா’ கூட்டணி முந்திக் கொண்ட அமித்ஷா - ஷாக் கொடுத்த பாஜக

Update: 2023-08-02 05:15 GMT

திட்டமிட்ட ‘இந்தியா’ கூட்டணி முந்திக் கொண்ட அமித்ஷா - ஷாக் கொடுத்த பாஜக

மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க கோரி, நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், இன்று காலை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின்போது, மணிப்பூர் விவகாரம் குறித்து அவர்கள் பேச இருப்பதாக தெரிகிறது. அண்மையில் மணிப்பூர் சென்று வந்த எம்.பி.க்கள் குழுவும் இந்த சந்திபில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் சந்திப்புக்கு முன்னர், அமித் ஷா சந்தித்தது முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்