லைபீரியாவில் நெரிசலில் சிக்கி 29 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் தேவாலயத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் தேவாலயத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.லைபீரியத் தலைநகர் மொனரோவியாவில் உள்ள தேவாலயத்தில் வழக்கமான பிரார்த்தனைக் கூட்டம் நடந்து உள்ளது. ஏராளமானோர் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்று இருந்த நிலையில், ஆயுதமேந்திய கொள்ளையர்கள் அங்கு நுழைந்ததாக தெரிகிறது. இதனால், அங்கிருந்த மக்கள் அச்சமடைந்து, நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். இதில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, லைபீரியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் வா (George Weah) அறிவித்து உள்ளார். இதனிடையே, நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பாக, அந்நாட்டு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.