தாய்லாந்தில் ஒமிக்ரான் பரவல் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்
தாய்லாந்து நாட்டில் ஒமிக்ரான் பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தாய்லாந்து நாட்டில் ஒமிக்ரான் பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தாய்லாந்திலும் ஒமிக்ரான் வகை கொரோனா பரவத் துவங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 2 தவணை தடுப்பூசி செலுத்திய பயணிகள் தாய்லாந்திற்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒமிக்ரான் பரவல் காரணமாக தாய்லாந்து வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவரையும் 14 நாட்களுக்கு கட்டாயம் தனிமைப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுலா தொழிலை பிரதானமாக நம்பியிருக்கும் அந்நாட்டு மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.