ஒமிக்ரானால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், ஒமிக்ரான் தொற்றால் கடும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் - மருத்துவர் ஏஞ்சலிக் எச்சரித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், ஒமிக்ரான் தொற்றால் கடும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என ஒமிக்ரானை முதன் முதலில் கண்டறிந்த மருத்துவர் ஏஞ்சலிக் எச்சரித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தற்போது 90க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் ஊடுருவி உள்ளது.
இந்நிலையில், முதன் முறையாக ஒமிக்ரான் வைரஸை கண்டறிந்த தென் ஆப்பிரிக்க மருத்துவ சங்க தலைவர் ஏஞ்சலிக் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.
அதில் இதுவரை ஒமிக்ரான் தாக்குதலுக்கு ஆளானவர்கள் அனைவரிடமும் லேசான பாதிப்பே காணப்படுவதாகவும்,
அதே வேளையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் ஒமிக்ரான் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் போது, அவர்கள்
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் டெல்டாவை விட ஒமிக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும்
தற்போது ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் மீண்டும் அதிகளவில் தொற்று பாதிப்புக்கு ஆளாகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.