போக்குவரத்து விதியை மீறிய கார் - காரை நிறுத்த காரின் மேல் அமர்ந்த காவலர்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் போக்குவரத்து விதியை மீறிய காரை நிறுத்த முயன்ற போலீசார், காரின் முன்னாள் தொங்கியபடி 1 கிலோமீட்டர் வரை இழுத்து செல்லப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் போக்குவரத்து விதியை மீறிய காரை நிறுத்த முயன்ற போலீசார், காரின் முன்னாள் தொங்கியபடி 1 கிலோமீட்டர் வரை இழுத்து செல்லப்பட்டார். அந்தேரியில் போக்குவரத்து விதியை மீறிய காரை, அங்கிருந்த போலீசார் நிறுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால், அவர் காரின் மேல் ஏறி உட்கார்ந்து உள்ளார். இந்நிலையில், கார் ஓட்டுனர் போலீசார் காரில் இருந்தபடியே காரை ஒரு கிலோமீட்டர் வரை இயக்கியுள்ளார். இந்நிலையில், கார் ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.