ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகள் - பயங்கரவாத எதிர்ப்பு போர் பயிற்சி

ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளின் சார்பில் பாகிஸ்தானில் அடுத்த வாரம் நடைபெற உள்ள பயங்கரவாத எதிர்ப்பு போர் பயிற்சிகளில் இந்தியா பங்கெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2021-10-01 04:43 GMT
ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளின் சார்பில் பாகிஸ்தானில் அடுத்த வாரம் நடைபெற உள்ள பயங்கரவாத எதிர்ப்பு போர் பயிற்சிகளில் இந்தியா பங்கெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், கஸகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் ஷாங்காய் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ளன. அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைக்க
ஷாங்காய் கூட்டமைப்பு 2001இல் உருவாக்கப்பட்டது. அக்டோபர் முதல் வாரத்தில், பாகிஸ்தானின் பப்பி பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு போர் பயிற்சிகள் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளின் பிராந்திய பயஙகரவாத எதிர்ப்பு அமைப்பின் 36ஆவது மாநாட்டின் முடிவில் அறிவிக்கப்பட்டது.  அக்டோபர் 3இல் தொடங்க உள்ள இந்த பயங்கரவாத எதிர்ப்பு போர் பயிற்சிகளுக்கு
3 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்றை இந்தியா அனுப்ப உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்