ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் - அதிபர் புதின் கட்சி அமோக வெற்றி
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளது.
புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சிக்கு, தேர்தலில் 50 சதவிகித வாக்குகள் கிடைத்து இருப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இந்த தேர்தலில் எதிர்கட்சியான ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 20 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்து உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியால் புதின் கட்சிக்கு ரஷ்யாவில் மேலும் செல்வாக்கு அதிகரித்து உள்ள நிலையில், தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக ரஷ்ய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.