நவால்னி உருவாக்கிய வாக்குப்பதிவு செயலி: ஆப்பிள்,கூகுள் ஸ்டோர்களில் இருந்து நீக்கம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி உருவாக்கிய வாக்குப்பதிவு செயலி, ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-19 07:15 GMT
அலெக்சி நவால்னி பணமோசடி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு, மாஸ்கோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதிபர் விளாடிமிர் புதினை  எதிர்த்ததால் நவால்னி கைது செய்யப்பட்டதாக, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தற்போது  ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளதைத் தொடர்ந்து, நவால்னி உருவாக்கிய செயலி, கூகுள் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்