உலக அளவில் அதிகரிக்கும் தொற்றுப் பரவல்- 28கோடியே 78லட்சத்தைத் தாண்டிய எண்ணிக்கை

உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Update: 2021-09-17 08:29 GMT
உலக அளவில் கொரோனாவால பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 கோடியே 78 லட்சத்து 26 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது.


மேலும் தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 லட்சத்து 83 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 20 கோடியே 44 லட்சத்து 70 ஆயிரத்து 415 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனைகளில், 1 கோடியே 86 லட்சத்து 71 ஆயிரத்து 978 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


பிலிப்பைன்சில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - 23 லட்சத்தைக் கடந்த பாதிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிதாக 21 ஆயிரத்து 261 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்தைக் கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 277 பேர் பலியான நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 


மேலும் இதுவரை 20 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தற்போது 1 லட்சத்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - 2கோடியே 10லட்சத்தைத் தாண்டிய எண்ணிக்கை

கடந்த கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 34 ஆயிரத்து 407 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


நாடு முழுவதும் 643 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். 

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்து 17 ஆகவும், 

இறப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 89 ஆயிரத்து 240 ஆகவும் அதிகரித்துள்ளது. 




Tags:    

மேலும் செய்திகள்