லூசியானாவை தாக்கிய ஐடா புயல் - இரவு பகலாக நடக்கும் மீட்பு பணிகள்
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை தாக்கிய ஐடா புயலின் விளைவாக, அங்கு மின்சார விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புயலினால் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், லூசியானா மாகாணத்தில் சுமார் 50 சதவீத பகுதிகளில் மின்சார விநியோகம்
துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 லட்சம் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு
மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
லூசியானாவின் மிக பெரிய நகரான நியு ஆர்லியன்ஸ் மாநகர் பகுதியில்
ஏராளமான மின் கோபுரங்கள் மற்றும் கேபிள்கள் சேதமடைந்துள்ளதால்,
அடுத்த சில வாரங்களுக்கு அங்கு மின்சார விநியோகம் சாத்தியமில்லை
என்று தகவல்கள் கூறுகின்றன.
நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகளில்
15,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதை ஒரு பேரிடராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
3,600 பேரிடர் மீட்பு பணியாளர்களையும், 34 லட்சம்
உணவு பொட்டலங்களையும் லூசியானா மாகாணத்திற்கு அனுப்பியுள்ளது, அமெரிக்க அரசு
மீட்பு பணிகள் இரவு பகலாக நடைபெறும் நிலையில், பலியானவர்கள்
எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.