மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்: லூதியானா, புளோரிடாவில் தொற்று அதிகரிப்பு
அமெரிக்காவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.
மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது லூதியானா, புளோரிடா மாகாணங்களில் தொற்று பரவல் தினமும் உயர்ந்து வருவதாக அந்நாட்டு சுகாதார துறை கவலை தெரிவித்துள்ளது. லூதியானாவில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் குறைந்திருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. தொற்று பாதித்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்றும் கூறப்படுகிறது. புளோரிடா மாகாணத்தை பொறுத்தமட்டில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவதால், தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டியுள்ளது.