கூடுகிறது ஜி-7 மாநாடு - தலிபான்கள் செயல்கள் தான் தீர்மானிக்கும்
ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க ஜி 7 நாடுகளின் மாநாடு இன்று கூடுகிறது
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவிக்கையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து அவசரகால ஜி-7 நாடுகளின் மாநாடு இன்று கூடுகிறது.ஆப்கான் மக்களுக்கு ஆதரவாக துணை நிற்கவும், மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவ வேண்டுமென என நட்பு நாடுகளை தான் கேட்கவிருப்பதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் தாலிபான்களின் செயல்களை வைத்துதான் அவர்கள் தீர்மானிக்க படுவார்களே தவிர வார்த்தைகளில் இல்லை எனவும் கூறியுள்ளார்