"தலிபான்கள் அராஜகம் செய்தால் நடவடிக்கை"- அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அராஜகங்களை அரங்கேற்றினால் பொருளாதார தடைகள் உள்ளிட்ட தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்து உள்ளார்.

Update: 2021-08-23 10:20 GMT
தலிபான்கள் தொடர்பாக வாஷிங்டனில் பேட்டியளித்த அவர், ஆப்கானிஸ்தான் மீது பிரிட்டன் தடை விதித்தால், அமெரிக்கா அதை ஆதரிக்கும் என்றார். காபூல் விமான நிலையத்தை கண்காணித்துவரும் அமெரிக்க படைகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் தலிபான்கள் எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். அமெரிக்கர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதிலும் தலிபான்கள் சிக்கலை ஏற்படுத்தவில்லை என்றும் பைடன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்