அமெரிக்க ராணுவ விமானத்தில் 823 பயணிகள்: ஒருவர் மீது ஒருவர் அமர்ந்த ஆப்கான் மக்கள்
ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ள தலிபான்களில் இருந்து தப்பித்து விமானத்தில் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து செல்லும் கூட்ட நெரிசல் மிகுந்த புகைப்படத்தை பகிர்ந்த பெண்டகன், அமெரிக்க ராணுவ விமானம் இதுவரை இல்லாத அளவுக்கு 823 பேரை ஏற்றி சென்றதாக குறிப்பிட்டுள்ளது.
சி-17 என்ற அமெரிக்க ராணுவ விமானம் ஹமித் கர்ஜாய் சர்வதேச விமானத்தில் இருந்து ஆப்கானிஸ்தானியர்களை ஏற்றிக் கொண்டு கத்தாருக்கு சென்றது. அதில், கூட்ட நெரிசலுடன் ஏராளமானோர் ஒருமீது ஒருவராக அமர்ந்திருந்தனர். 640 பேர் செல்லும் திறனுடைய விமானத்தில் இரு மடங்கு பயணிகளை ஏற்றி சென்றதாக கூறிய ராணுவ தளபதி எரிக் குத், அந்த தருணத்தில் விமான சட்டத்திட்டங்கள் எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை, அதில் இருந்தவர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தது என்றார்.