தலிபான்களை நம்ப முடியாது;அவர்கள் ஆட்சி எங்களுக்கு வேண்டாம் - பெண் ஆப்கான் அகதிகள் ஆதங்கம்

"பெண்களுக்கான உரிமைகள் கொடுக்கப்படும் என்று தாலிபன்கள் கூறுவது பொய் எனவும், தாலிபான்கள் கொடுமையானவர்கள்... அவர்களை நம்ப முடியாது"

Update: 2021-08-18 10:42 GMT
"பெண்களுக்கான உரிமைகள் கொடுக்கப்படும் என்று தாலிபன்கள் கூறுவது பொய் எனவும், தாலிபான்கள் கொடுமையானவர்கள்... அவர்களை நம்ப முடியாது" என்றும் சில ஆப்கான் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லியில், தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். டெல்லி ஜிங்புரா பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகள் வசித்து வருகிறார்கள். இவர்கள், பேக்கரி கடைகள், மொபைல் ரீசார்ஜ் கடைகள், என பல்வேறு கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஆப்கானை தலிபான்கள் கையகப்படுத்தியது குறித்து அச்சம் தெரிவித்த அவர்கள், பெண்களுக்கு தலிபான்கள் மீது நம்பிக்கை இல்லை எனவும், 20 வருடங்கள் பின்னோக்கி சென்று விடுமோ என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்