"தலிபான்களுடன் நட்புறவுடன் செயல்பட தயார்" - சீன அரசு அறிவிப்பு
தலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் அரசுடன் நட்பு ரீதியிலான உறவுகளை மேம்படுத்த தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
தலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் அரசுடன் நட்பு ரீதியிலான உறவுகளை மேம்படுத்த தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை பாகிஸ்தான் அங்கீகரித்துள்ள நிலையில், சீனாவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதனிடையே தலிபான்கள் நடவடிக்கையை பொறுத்து அவர்களின் அரசை அங்கீகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என ரஷ்யா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.