அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - தினசரி பாதிப்பு 20,000க்கும் அதிகமாகப் பதிவு
தொடர்ந்து 4வது நாளாக அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து 4வது நாளாக அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மே மாதத்திற்குப் பிறகு, தற்போது மீண்டும் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்து பதிவாகிறது. கடந்த புதன் கிழமை 20 ஆயிரத்து 94 பேருக்கும், வியாழக்கிழமை 27 ஆயிரத்து 237 பேருக்கும், வெள்ளிக் கிழமை 26 ஆயிரத்து 742 பேருக்கும் தொற்று பாதித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 47 ஆயிரத்து 207 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 7 ஆயிரத்து 135 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.