பனிப்பாறை உருகுவதைத் தடுக்க வழி - பனிப்பாறைகளை மூடும் பணி துவக்கம்
இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள ப்ரிசினா பனிப்பாறைகள் உருகுவதைத் தவிர்க்க, பனிப்பாறைகளை மூடும் பணி துவங்கியுள்ளது.
இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள ப்ரிசினா பனிப்பாறைகள் உருகுவதைத் தவிர்க்க, பனிப்பாறைகளை மூடும் பணி துவங்கியுள்ளது. சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்புள்ள பனிப்பாறைகளை மூட 1 மாத காலம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சூரியக் கதிர்கள் பனிப்பாறைகளின் மீது விழுவது தடுக்கப்படுவதால், 70 சதவீதம் பனிப்பாறைகள் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியின் ஊடே எடுக்கப்பட்ட ட்ரோன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.