ரஷ்யாவில் தானாக இயங்கும் வாகனம் அறிமுகம்
ரஷ்யாவில் உள்ள எஸ்பெர் டெக் நிறுவனம் தானாக இயங்கும் வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
ரஷ்யாவில் உள்ள எஸ்பெர் டெக் நிறுவனம் தானாக இயங்கும் வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 'எதிர்காலத்தின் டாக்ஸி' என்ற பெயரில் இந்த வாகனத்தை எஸ்பெர் டெக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வாகனம் 6 பேரை ஏற்றி செல்லக்கூடிய அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ள இந்த வாகனம், சர்வதேச அளவிலான தானியங்கி வாகனங்களுக்கான நெறிமுறைகளை பூர்த்தி செய்துள்ளதாக எஸ்பெர் டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.